கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நெல்லை கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின்

Added : ஜன 10, 2020
Advertisement

திருநெல்வேலி: நெல்லை கண்ணணுக்கு, திருநெல்வேலி மாவட்ட கோர்ட், நிபந்தனை ஜாமின் வழங்கியது. திருநெல்வேலியில், டிசம்பர் 29ல், எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கூட்டம் நடத்தினர்.

இதில், காங்கிரஸ் பிரமுகர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, அவதுாறாக பேசினார்.பா.ஜ.,வினர் புகாரின்படி, நெல்லை கண்ணன் கைதாகி, சேலம் சிறையில் உள்ளார். திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில், இரண்டு முறை தாக்கலான ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.நேற்று மாலை, மாவட்ட நீதிபதி நசீர்அகமது, நெல்லை கண்ணனுக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்ட மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், தினமும் இரண்டு முறை கையெழுத்திட நிபந்தனை விதித்தார்.

வழக்கு ரத்து கோரி மனு:உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நெல்லை கண்ணன் தாக்கல் செய்த மனுவில், 'சோலியை முடிக்கவில்லையே' என, நெல்லை வட்டார வழக்கில் பேசினேன். அரசியல் நோக்கில் கருத்து வெளியிட்டேன்.'பிரதமர், உள்துறை அமைச்சரின் உயிருக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை.'நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என கோரியிருந்தார்.நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மேலப்பாளையம் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜனவரி 20க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X