சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல்

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

திருமங்கலம்: மதுரை கப்பலுார், 'டோல்கேட்'டில் தவறுதலாக, 'பாஸ்டேக்' கட்டண வழியில் சென்ற அய்யப்ப பக்தர்கள் மீது, ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர்.

சென்னையைச் சேர்ந்த பக்தர்கள், பாஸ்கர் என்பவர் தலைமையில் சபரிமலை சென்று, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக, மதுரை சென்றனர். கப்பலுார் டோல்கேட்டில் நெரிசல் இருந்ததால், மூன்றாவது தடத்தில் சென்றனர்.அப்போது, ஊழியர்கள், 'இது பாஸ்டேக் கட்டணதாரர்கள் செல்லும் வழி. நீங்கள் சென்றால், இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்' எனக் கூறினர். 'ஜன. 15 முதல் தான், பாஸ்டேக் அமலுக்கு வருகிறது. நீங்கள் இப்போதே இருமடங்கு கட்டணம் கேட்கிறீர்களே' என, வேன் டிரைவர் கேட்டார். இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வேனை பின்னால் எடுக்க, டிரைவர் முயற்சி செய்தபோது, வாக்குவாதம் முற்றியது. வேனில் இருந்து இறங்கிய பக்தர்கள் மீது, வடமாநில ஊழியர்கள் இரும்பு குழாய், கம்புகளால் தாக்கினர்.

இதில், பாஸ்கர் உட்பட நான்கு பக்தர்கள் காயம் அடைந்தனர்.இதையடுத்து, ஊழியர்கள் நான்கு பேரை, விசாரணைக்காக, திருமங்கலம் போலீசார் அழைத்துச் சென்றனர். திருமங்கலம் அய்யப்பா சேவா சங்கம், டோல்கேட் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர், ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களை, போலீசார் சமரசம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
11-ஜன-202000:32:02 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை டோல் கேட் ஊழியர்களுக்கு பயணிகளை தாக்கும் அதிகாரம் வழங்கியது யார்? அவர்களை போலீஸ் கைது செய்து அபராதம் வசூலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X