சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., பொது செயலர் வீட்டில் நகை பணம் கொள்ளை

Added : ஜன 10, 2020
Advertisement

ஓசூர்,: ஓசூரில், பா.ஜ., மாநில பொதுச் செயலர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.

ஓசூர், நேரு நகர், வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர், நரேந்திரன், 56; பா.ஜ., மாநில பொதுச் செயலர். இவரது மனைவி மணிமேகலை, 52. இரு மகள்களும் திருமணமாகி, சென்னையில் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால், நரேந்திரன் மனைவி, சென்னை சென்றுள்ளார். கட்சிப் பணியாக, நரேந்திரனும் ஐந்து நாட்களாக வெளியூர் சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம நபர்கள், நரேந்திரன் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த, 9 சவரன் தங்க நகை, ஒரு லட்சம் ரூபாய், பூஜை அறையில் இருந்த, 7 கிலோ ஐம்பொன் ஸ்ரீசக்கரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய நரேந்திரன், வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். டி.எஸ்.பி., சங்கு தலைமையில் வந்த போலீசார், விசாரணை நடத்தினர்.வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில், மர்ம நபர்கள் இருவர், வீட்டிற்குள் வந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதை வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X