சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது

திருப்பத்துார்: சென்னையில் இருந்தபடி, 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளில், சில நாட்களாக பெண்கள் மொபைல் போனுக்கு, ஆபாச வீடியோ வந்தது. இது குறித்து, அம்பலுாரைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, நாட்றம்பள்ளி போலீசில் புகார் செய்தார்.தனியார் நிறுவனம்விசாரணையில், சென்னை, குரோம்பேட்டையில் இருந்து, ஆபாச வீடியோ அனுப்பப்பட்டது தெரிந்தது. நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில், குரோம்பேட்டை சென்ற போலீசார், நேற்று முன்தினம் இரவு, வினோத், 24, என்பவரை கைது செய்தனர்.அவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், டிப்ளமா படித்து, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது.போலீசார் கூறியதாவது:குரோம்பேட்டையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், தவற விட்ட மொபைல் போனை, வினோத் எடுத்து, அதிலுள்ள, ட்ரூ காலரில் வரும் பெண்கள் மொபைலுக்கு, ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்தார். பெண் குரலில், ஆபாசமாக பேசி வந்து உள்ளார்.பல பெண்களுக்கு, 'செக்ஸ்' தொல்லை கொடுத்துஉள்ளார்.

இதுவரை, 100 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிஉள்ளார்.சிறுவன் கைதுதிருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சி. நம்மியந்தலைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, 5ம் தேதி மாயமானார். அவரது தந்தை, கடலாடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணையில், சிறுமி, அதே கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவனுடன், காஞ்சி கிராமத்தில் தங்கியிருப்பது தெரிந்தது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, சிறுவன் உல்லாசமாக இருந்ததும், பின், திருமணம் செய்ய மறுத்ததும் தெரிந்தது. கடலாடி போலீசார், 'போக்சோ' சட்டத்தில், சிறுவனை கைது செய்தனர்.

இதேபோல, விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், தனியார் ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், சில தினங்களுக்கு முன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். புகாரின்படி, சிறுவனை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
16-ஜன-202011:10:54 IST Report Abuse
TamilArasan ஆபாச வலை தளங்களை தடை செய்யுங்கள்... மேலும் அதை நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை கொடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
16-ஜன-202005:25:20 IST Report Abuse
Subramanian Arunachalam இது மாதிரி செயல்கள் இப்போது மிகவும் அதிகரித்து விட்டது . ஆகையால் இது ஒரு தண்டனைக்கு உரிய குற்றமாக கருதக்கூடாது . ஓரின சேர்க்கை, மாற்றான் மனைவியுடன் உறவு வைப்பது என்பது இப்போது தண்டனைக்கு உரிய குற்றம் அல்ல . எனவே ஆபாச வீடியோ அனுப்புவதை ஒரு குற்ற செயலாக கருதக்கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X