சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தேறுவாரா கெஜ்ரிவால்?

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 தேறுவாரா கெஜ்ரிவால்?

டில்லியில், பிப்ரவரி 8ல், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வழக்கம் போல, ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் தான் முட்டல் மோதல். ஆம் ஆத்மியில், சந்தேகமே இல்லாமல், தற்போதைய முதல்வர் கெஜ்ரிவால் தான் முதல்வர் வேட்பாளர். அவரை விட்டால், வேறு ஆள் கிடையாது.

பா.ஜ.,வில், தற்போதைய மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனும், முன்னாள் அமைச்சர் வி.கே.மல்ஹோத்ராவும் உள்ளனர். ஆனால், எதிர் வேட்பாளரை எதிர்கொள்ளச் சரியான நபர்கள் இவர்கள் இல்லை என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. 'ரூம் போட்டு யோசித்து' இவர்கள் முடிவை அறிவிப்பதற்குள், தேர்தலே முடிந்து விடும் போலிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியோ, தனக்கும், இந்த தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல், ஒதுங்கி நிற்கிறது. இந்த பெரிய கட்சிகள் இரண்டும் இப்படி, குழப்பத்தில் இருப்பது, கெஜ்ரிவாலுக்கு, பலாச்சுளையை தேனில் தோய்த்துச் சாப்பிடுவது போல் உள்ளது. திக்குமுக்காடிக் கிடக்கிறார். ஆனால் மக்களோ, 'காற்று மாசு பிரச்னையால், நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். இவர் என்னடான்னா, 'கவலையை விடுங்கள்' என்கிறார். இவரை நம்பி மறுபடி ஓட்டு போட்டா, நம்ம கதை கந்தலாகத் தான் போகும்' என, விரக்தி மனப்பான்மையில் உள்ளனர்.

எனவே, காற்று மாசு பிரச்னையைத் தீர்க்க, திடமான தீர்வைக் கொடுக்கிறேன் என்பதை, தேர்தல் அறிக்கையில் வெளியிடுபவர் தான், டில்லி முதல்வராவார் என்பது தெளிவாகிறது. யார் முந்திக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swami Sivaraman - Chennai,இந்தியா
11-ஜன-202012:39:31 IST Report Abuse
Swami Sivaraman கெஜ்ரிவால், மற்ற கட்சிகளைவிட பரவா இல்லை. அவரே மீண்டும் வருவது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X