டூ - வீலர்கள் மோதல் மூன்று பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ - வீலர்கள் மோதல் மூன்று பேர் பலி

Added : ஜன 10, 2020

மதுரை: பேரையூர் அருகே, டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், போலீஸ்காரர், இரண்டு மாணவர்கள் பலியாகினர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர், கார்த்திக் பாண்டியன், 30; விருதுநகர் மாவட்டம், நத்தம்பட்டி ஸ்டேஷன் போலீஸ்காரர். இவரும், உறவினர் ராஜபாண்டி என்பவரும் நேற்று பகல், 12:00 மணிக்கு, டூ - வீலரில், ஹெல்மெட் அணிந்து, எம்.சுப்புலாபுரத்திற்கு சென்றனர்.தேனி மாவட்டம், போடிநாயக்கனுாரைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர், யக்னராஜ் ஜெயந்த், 21, பி.காம்., மாணவர் கேசவன், 19; இருவரும் ஹெல்மெட் அணிந்து, மற்றொரு டூ - வீலரில், சங்கரன்கோவில் சென்று கொண்டிருந்தனர்.திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், பாரைபட்டி விலக்கு அருகே, வளைவில் வந்தபோது, இரண்டு டூவீலர்களும் அதிவேகமாக மோதிக் கொண்டன.

இதில், ஜெயபாண்டி தவிர, மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அடுத்தடுத்த தெருவில் வசிக்கும் நண்பர்களான மாணவர்கள் இருவரும், வீட்டுக்கு தெரியாமல், போடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கினர்.இறந்த கார்த்திக் பாண்டியன், போலீஸ் பணியில் சேர்ந்து, ஐந்து ஆண்டுகளாகின்றன. 6 வயதில் மகன், 4 வயதில் மகள் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X