சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியிடம் சில்மிஷம் 2 ஆசிரியர்களுக்கு, 'போக்சோ'

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (14)
Advertisement
 மாணவியிடம் சில்மிஷம் 2 ஆசிரியர்களுக்கு, 'போக்சோ'

பென்னாகரம்: அரசுப்பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, இரு ஆசிரியர்கள், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம், இரு ஆசிரியர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாணவியின் பெற்றோர் மொபைல்போனுக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்று, இரு ஆசிரியர்களுக்கும் தர்ம அடி கொடுத்தனர்.சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது குறித்து, மாணவியின் பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பள்ளியில் பணிபுரியும், சமூக அறிவியல் ஆசிரியர்கள் சின்னமுத்து, 38, லட்சுமணன், 38, ஆகியோர் மீது, பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.நேற்று மாலை, இரு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.----------

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
14-ஜன-202012:53:24 IST Report Abuse
வால்டர் போக்ஸோவில் கைது என்றால் வேலையை பறித்து விடுங்கள். சாப்பாட்டிற்கே பிச்சை எடுத்தால்தான் இவனுங்களுக்கு புத்தி வரும். அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவிகள் பாவம் வசதி இல்லாமல்தானே வருகிறார்கள். கல்வி கற்று கொடுக்க சொன்னால் என்னவெல்லாம் கொடுமை செய்கிறார்கள். இவனுங்களை நம்பி எப்படி குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
14-ஜன-202011:28:19 IST Report Abuse
Dv Nanru இவர்கள் கற்று கொடுப்பவர்கள் ஆனால் இவர்களுக்கு சமூகம் மிக சிறந்த பாடம் கற்பிப்பிக்க வேண்டும். இவர்களால் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்திவிட்டார்கள் அதனால் இங்கே இந்த பழமொழி எடுபடாது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம்.. காரணம் ஆசிரியர்கள் தான் இந்த நாட்டை வழிநடத்தி செல்பவர்களை உருவாக்குகிறவர்கள் ஆசிரியப்பணி அறப்பணி அவர்களை குறைத்து எடைபோடவேண்டாம்..ஆசிரியர்களை போல் மீக தூய்மையானவர்கள் யாரும் இல்லை..
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-ஜன-202005:52:58 IST Report Abuse
 nicolethomson தூ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X