கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில், மாணவரை, மலத்தை அள்ள வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியைச் சேர்ந்தவர் ரகுநாதன் மனைவி விஜயலட்சுமி, 35; ராமாபுரம்புதுார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. கடந்த, 2015 நவ., 13ம் தேதி மாலை, இரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், வகுப்பறையில் மலம் கழித்துள்ளார்.விஜயலட்சுமி, அங்கிருந்த, 7 வயதுடைய
 சிறுவனை மலம் அள்ள வைத்த  ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை

நாமக்கல்: நாமக்கல்லில், மாணவரை, மலத்தை அள்ள வைத்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எஸ்.வாழவந்தியைச் சேர்ந்தவர் ரகுநாதன் மனைவி விஜயலட்சுமி, 35; ராமாபுரம்புதுார் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. கடந்த, 2015 நவ., 13ம் தேதி மாலை, இரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், வகுப்பறையில் மலம் கழித்துள்ளார்.விஜயலட்சுமி, அங்கிருந்த, 7 வயதுடைய மாணவரை அழைத்து, அந்த மனித கழிவை அள்ளச் செய்துள்ளார்.

தகவலறிந்த பெற்றோர், நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியை மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.மாவட்ட, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு நடந்தது. விஜயலட்சுமி, ஜாமினில் வெளிவந்த நிலையில், இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது.

அதில், விஜயலட்சுமிக்கு, ஐந்து ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தனசேகரன் தீர்ப்பளித்தார்.இதில், அபராதத் தொகை செலுத்தப்பட்டது.'சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் பணியிலிருந்து, அவர் நிரந்தரமாக நீக்கப்படலாம்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-202011:27:21 IST Report Abuse
Yaro Oruvan .. அது ஒன்றும் ஐந்து வருட தண்டனை குற்றம் அல்ல..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-202016:27:28 IST Report Abuse
தமிழவேல் 6 மாத சிறை தண்டனை போதுமானது என்று தோன்றுகின்றது.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-ஜன-202009:40:11 IST Report Abuse
ஆரூர் ரங் ஜப்பான் பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளியை சுத்தமாக வைத்திருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களே கழிவறையையும் சுத்தம் செய்கிறார்கள் நம் ஊரில் இது பெரும் குற்றமாம் .
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜன-202016:26:23 IST Report Abuse
தமிழவேல் கழிவறையை சுத்தம் செய்வதற்கும், மலத்தை அள்ளச் செய்தற்கும் வித்தியாசம் உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X