பொது செய்தி

தமிழ்நாடு

பல்லவன்குளம் ஏரியில் புதரை அகற்ற கோரிக்கை

Added : ஜன 10, 2020
Advertisement

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளில், பல்லவன் குளம் ஏரி, குறிப்பிடத்தக்கது. பவுஞ்சூர் அடுத்த, செம்பூர், கல்குளம், மடவிளாகம் பகுதிகளில், 1,805 ஏக்கர் பரப்பில், இந்த ஏரி விரிந்துள்ளது.

இதன் கொள்ளளவு, 356 மில்லியன் கன அடி; ஆழம், 15.7 அடி. விவசாய பாசன பரப்பு, 2,125 ஏக்கர். ஏரியில், ஒரு கலங்கல், நான்கு மதகுகள் உள்ளன.மதுராந்தகம் ஏரி உபரிநீர், கிளியாற்றில் கலந்து, ஈசூர் அணைக்கட்டை அடைந்து, கால்வாய் வழியாக, இந்த ஏரியை நிரப்பும். இந்த நீரை நம்பி, செம்பூர், தண்டரை, பரசநல்லுார் உட்பட, 18 கிராமங்களில், விவசாயம் நடக்கிறது. பொதுப்பணித் துறை, கீழ்பாலாறு வடிநில கோட்ட நிர்வாக பொறுப்பில் உள்ள ஏரி, 4.25 கோடி ரூபாய் மதிப்பில், சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.

கரையை பலப்படுத்தி, இரு மதகுகள் மட்டும் புதுப்பிக்கப்பட்டன. ஆனால், ஏரியில் அடர்ந்த புதர் செடிகளை அகற்றவில்லை.இந்நிலையில், தற்போதைய மழையில், ஏரி, 11 அடி ஆழம் நிரம்பியது. முழு கொள்ளளவில் நிரம்பினால், நீருக்குள், புதர் மறையும். தற்போது, 5 அடி ஆழம் குறைவாக நிரம்பி, ஏரி, புதருடனே காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X