கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 10, 2020
Advertisement

மதுரை: தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கில், 'அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யலாம். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பர்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு:விருதுநகர் மாவட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற, ஆளுங்கட்சியினர், அரசு அலுவலர்கள், போலீசாரின் ஒத்துழைப்புடன், தி.மு.க., கவுன்சிலர்களை கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், ''விருதுநகர் ஒன்றிய, அ.தி.மு.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், அம்மாவட்ட, தி.மு.க., செயலர் தங்கம் தென்னரசு முன்னிலையில், அக்கட்சியில் இணைந்ததாக, படத்துடன், 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியாகியுள்ளது.''இதை பார்க்கையில், தி.மு.க.,வினரிடம் இருந்து பாதுகாக்க, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது,'' என்றார்.நீதிபதிகள், 'அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யலாம். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பர்.

இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை' எனக் கூறி, வழக்கை முடித்தனர்.lசிவகங்கை மாவட்ட ஊராட்சி காங்., கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தராணி கடத்தப்பட்டதாக, அவரது மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு, 'ஆரோக்கிய சாந்தராணி, சிவகங்கை கலெக்டர் முன் ஆஜராக வேண்டும். 'கலெக்டர் விசாரித்து, அவர் சுதந்திரமாக ஓட்டுப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.lதுாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கடத்தப்பட்டதாக, தவறான தகவலுடன் வழக்கு தொடர்ந்த, முன்னாள் ராணுவ வீரர், பால்பாண்டியன் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X