சம்பவம் செய்தி

தமிழ்நாடு

27 சதவீதம், 'போனஸ்' நெசவாளர்கள் அதிருப்தி

Added : ஜன 10, 2020
Advertisement

காஞ்சிபுரம் : அண்ணா பட்டு கைத்தறி சங்கத்தில், இந்தாண்டு, 27 சதவீதம் மட்டுமே பொங்கல், 'போனஸ்' வழங்கியது, நெசவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

காஞ்சிபுரம் நகரில் இயங்கும், அறிஞர் அண்ணா கைத்தறி கூட்டுறவு சங்கம் பிரபலமானது.இந்த சங்கத்தில், ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்து, பணியாற்றி வருகின்றனர்.கோடிக்கணக்கில் லாபத்துடன் இயங்கி வந்த அண்ணா கைத்தறி சங்கம், முறைகேடு காரணமாக நலிவடைந்து வருகிறது.கடந்தாண்டு, பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து, பொங்கல் போனசாக, 44 சதவீதம் நெசவாளர்கள் பெற்றனர்.இந்த பொங்கல் பண்டிகைக்கும், 44 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், பல்வேறு காரணங்கள் கூறி, போனஸ் சதவீதம் குறைப்பதாக சங்க நிர்வாகம் தெரிவித்தது.

இதனால், அதிருப்தியடைந்த நெசவாளர்கள், சமீபத்தில், ஜவுளிக்கடை சத்திரத்தில் கூட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இருப்பினும், போனஸ் தொகையை எதிர்பார்த்த அளவு வழங்க, சங்க நிர்வாகம் தயாராகவில்லை.கடந்த, 8ம் தேதி, சங்க கட்டடத்தில் நடைபெற்ற பேரவை கூட்டத்தில், 27 சதவீத போனஸ், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தாண்டு, குறைவான போனஸ் வழங்கப்பட்டது, நெசவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X