சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: ஜெ., மறைந்தாலும், அவர் ஆசியுடன் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நாங்கள், மிகவும் சாதாரணமானவர்கள்; முன்னாள் முதல்வரின் வாரிசுகள் அல்ல. அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்தும், நாங்கள் வரவில்லை; மிகவும் சாதாரணமானவர்கள். நான், விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். ஜெ., காட்டிய பாதையில் பயணிக்கிறோம் அவ்வளவு தான்.

'டவுட்' தனபாலு: ஜெ., பாதையில் பயணிப்பதாக கூறும் முதல்வர், அவர் பாணியில், நெருங்கிய தோழி என, யாரையும் உருவாக்கி விடாமல், அந்த கோஷ்டிகள், தமிழகத்தை சுருட்டி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான், தமிழக மக்களின் விருப்பம். மேலும், 'நாங்கள் முன்னாள் முதல்வரின் வாரிசு அல்ல' என, முதல்வர் கூறியது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சாடுவதற்காகத் தான் என்பது, 'டவுட்' இல்லாமலே நாட்டு மக்களுக்கு புரிகிறது.

***

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை வழங்க சட்டம் கொண்டு வந்தது. அப்போது அதை, அவரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த, தி.மு.க., ஆதரித்தது. அப்போது, ஹிந்துக்களை ஆதரித்த, தி.மு.க., இப்போது எதிர்ப்பது ஏன்?

'டவுட்' தனபாலு: அப்போது, கருணாநிதி என்ற தலைவர், தி.மு.க.,வுக்கு இருந்தார். அவருக்கும், ஹிந்து மதம் பிடிக்காது என்றாலும், சிறந்த தலைமை பண்பு கொண்டவர் என்பதால், அப்போது ஆதரித்தார். ஆனால் இப்போது, போராட்டங்கள் மூலம், பிரபலமாக வேண்டும் என துடிக்கும், 'இளைஞர்' கையில், தி.மு.க., உள்ளதால் தானோ என்னவோ, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற, 'டவுட்' பெரும்பான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது!

***

தி.மு.க.,வின் முரசொலி பத்திரிகை செய்தி: இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, அந்தமான் சென்றுள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, அங்குள்ள விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான, தி.மு.க.,வினர் திரண்டு, உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

'டவுட்' தனபாலு: தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம், எதிர்க்கட்சி - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'நல்ல பிள்ளைகள்' போல அமர்ந்து, சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தான், அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். 'ஸ்டாலின் இருந்தால், இப்படி இருக்காதே...' என்ற, 'டவுட்' வந்தது. முரசொலியை பார்த்ததும், அந்த டவுட் விலகி விட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-ஜன-202011:06:34 IST Report Abuse
D.Ambujavalli அம்மாவின் வழியா? பிரதமராகவே வீடு தேடி வந்து கூட்டணிக்கு கொடி காட்டினாலும், ‘வந்ததற்கு ஒரு வாய் சாப்பிட்டுப் போங்கள்’ என்று ஒட்டாமல் அனுப்பியதும், நீட், பொது விநியோகம் எதையுமே அண்ட விடாத அந்த தைரியமும், தீர்மானமும் எங்கே, ‘அங்கே’ எள் என்பதற்கு முன்பே, எல்லா மாநிலத்தையும் முந்திக்கொண்டு பணியாரமாகவே நிற்கும் இந்த அரசை ‘அங்கிருந்தே’ பார்த்து தலையில் அடித்துக்கொள்வார் உங்க அம்மா
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
11-ஜன-202009:34:23 IST Report Abuse
கல்யாணராமன் சு. KKK சிறந்த தலைமை பண்பு கொண்டதால் அதை ஆதரிக்கலே ....... அதை எதிர்த்தால் கூட்டணியிலிருந்து விலகவேண்டி வரும்............ அப்படி விலகினால், எல்லா மந்திரி பதவிகளையும் இழக்கவேண்டி வரும் ........ அப்படி இழந்தால், காசு அடிக்கமுடியாதே அப்படிங்கற ஒரே காரணம்தான் அப்போ ஆதரித்ததற்கு ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X