சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குரூப் ராமநாதபுரத்தில் செயலர் விசாரணை

Added : ஜன 10, 2020
Advertisement
 'குரூப்  ராமநாதபுரத்தில் செயலர் விசாரணை

ராமநாதபுரம்: கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையங்களில், 'குரூப் - 4' தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, எட்டு தாலுகாக்களில், 128 தேர்வு மையங்களில் நடந்தது. 32 ஆயிரத்து, 879 பேர் எழுதினர். இதில், 497 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.37 பேர் தேர்வுராமேஸ்வரத்தில் உள்ள ஆறு தேர்வு மையங்களில், 1,709 பேர் எழுதியதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 27 பேர் வெளி மாவட்டத்தினர். கீழக்கரையில், மூன்று தேர்வு மையங்களில், 1,131 பேர் எழுதினர். இதில், 20 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 13 பேர் வெளி மாவட்டத்தினர்.இம்மையங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள், தர வரிசை அடிப்படையில், முதல், 1,000 இடங்களில், 40 பேரும்; முதல், 100 இடங்களில், 35 பேரும் உள்ளனர். முறைகேடு புகாரை தொடர்ந்து, இவர்களின் விடைத்தாள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நேரில் ஆய்வுஇந்நிலையில் நேற்று, கீழக்கரை, ராமேஸ்வரம் தேர்வு மையங்கள், அங்கு பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், அலுவலர்களிடம், டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திலும் விசாரணை நடந்தது. செயலர் நந்தகுமார் கூறுகையில், ''குரூப் - 4 தேர்வு சம்பந்தமாக, விசாரணை தொடர்ந்து நடப்பதால், இது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.விசாரணைக்கு அழைப்புசிவகங்கை அருகே, பெரியகண்ணனுாரைச் சேர்ந்தவர் திருவராஜ், 46; ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர், 2012ம் ஆண்டில் இருந்து, ஏழு முறை, குரூப் - 4 தேர்வு எழுதியுள்ளார். கடந்த முறை நடந்த, வி.ஏ.ஓ., பணிக்கான தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.கடந்தாண்டு நடந்த குரூப் - 4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய, 35 பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இங்கு, முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதையடுத்து, அத்தேர்வு மையங்களில் தேர்ச்சி பெற்ற, 35 பேரையும், ஜன., 13ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக, டி.என்.பி.எஸ்.,சி., அழைப்பு விடுத்துள்ளது. ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதிய திருவராஜுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவராஜ் கூறுகையில், ''விசாரணையில் குற்றமற்றவன் என நிரூபிக்க தயார். கடும் உழைப்பின் மூலம் முதலிடம் பெற்றேன். மீண்டும் தேர்வு எழுத தயாராக உள்ளேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெறக் கூடாதா,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X