கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு நீதிபதி தலைமையில் குழு

Added : ஜன 10, 2020
Advertisement

மதுரை: 'மதுரை, அவனியாபுரத்தில், 2019ல் ஜல்லிக்கட்டு நடத்த, முன்னாள் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்தது போல், இம்முறையும், குழு அமைப்பது குறித்து, ஜன., 13ல் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

தைப் பொங்கலை ஒட்டி, மதுரை, அவனியாபுரத்தில் வரும், 15ல் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, அவனியாபுரத்தைச் சேர்ந்த சில தரப்பினரிடையே சர்ச்சை நிலவியது. அரசு தரப்பில், சமாதான பேச்சு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாக்குழு தொடர்பாக, மதுரை கலெக்டர் ஜன., 3ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். இது ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்துவதாகவும், கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து, அவனியாபுரம் கிராம மக்கள் சார்பிலான விழாக்குழு, ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுபோல், மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு தொடர்பாக, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'அவனியாபுரத்தில், 2019ல் ஜல்லிக்கட்டு நடத்த, முன்னாள் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, இந்நீதிமன்றம் உத்தரவிட்டது.'அதுபோல், இம்முறை எந்த நீதிபதி தலைமையில் குழு அமைப்பது என்பது குறித்து, ஜன., 13ல் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, வாய்மொழியாக கருத்து தெரிவித்து, அனைத்து வழக்குகளையும் வரும், 13க்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X