சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பண மோசடி வழக்கு மேலும் ஒரு பெண் கைது

Added : ஜன 10, 2020
Advertisement

கடலுார்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.

கடலுார், தேவனாம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் நரேந்திரகுமார், 28. இவரது நண்பர்கள் முரளி, கார்த்திக் ஆகியோர், 2018ல், ராமேஸ்வரம் சுற்றுலா சென்றபோது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர் அபிஷேக் வீட்டில் தங்கினர்.அங்கு வந்த அபிஷேக்கின் உறவினரான, முனியசாமியின் மனைவி தெபோரால் கிறிஸ்டி, 32, என்பவர் நரேந்திரகுமார் உள்ளிட்டவர்களிடம், 5 லட்சம் ரூபாய் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பி மூவரும், 11 லட்சத்து, 15 ஆயிரத்து, 300 ரூபாயை, தெபோரால் கிறிஸ்டியின் வங்கி கணக்கிற்கு, பல்வேறு தவணையில் அனுப்பியுள்ளனர்.இதற்கு உடந்தையாக, அவரது தந்தை பவுல் சந்திரசேகரன், 62, இருந்துள்ளார். பணத்தை பெற்று, வேலை வாங்கி தராமல், இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது குறித்து, நரேந்திரகுமார் உள்ளிட்டோர், கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், நவம்பர்ல 30ல், புகார் அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, தெபோரால் கிறிஸ்டி, பவுல் சந்திரசேகரன் ஆகியோரை, டிசம்பர், 20ல் கைது செய்தனர்.இந்த வழக்கில், இருவருக்கும் உடந்தையாக இருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, 48, என்பவரை தேடி வந்தனர். ராமநாதபுரத்தில் பதுங்கி இருந்த ஈஸ்வரியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.அவரிடம் இருந்து போலி செவிலியர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X