சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பொழுதுபோக்காக ஆரம்பித்த தொழிலில் சாதனை படைத்தேன்!

Added : ஜன 10, 2020
Advertisement
 பொழுதுபோக்காக ஆரம்பித்த தொழிலில் சாதனை படைத்தேன்!

சென்னை பெரும்பாக்கத்தில், 'நவ்ரா பீட்ஸ்' என்ற பெயரில், விதவிதமான செயற்கை மணி மாலைகள், நகைகளை விற்பனை செய்யும் சாம்பவி சுப்பையன்: சொந்த ஊர் காஞ்சிபுரம். இன்ஜினியரிங் முடித்து, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் பணியாற்றிய ரவி பாலசந்தரை காதலித்து, திருமணம் செய்தேன்.

கடந்த, 2007ல், கணவருக்கு, அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அவருடன் அமெரிக்கா செல்வதற்காக, வேலையை விட்டேன்.அமெரிக்காவில் வசிக்கும் போது, இரண்டு குழந்தைகள் பிறந்தன. வீட்டில் இருக்கும் போது, போரடிக்கும் போதெல்லாம், 'யுடியூப்' சமூக வலைதளத்தில், கைவினை பொருட்கள் தயாரிப்பு, 'வீடியோ'க்களை பார்ப்பேன். பொழுதுபோக்க, அவற்றை செய்யத் துவங்கினேன்.

என் மகளின் பிறந்த நாளுக்காக, நான் செய்த, சாதாரண மணிகளை கொண்டு உருவாக்கிய நெக்லஸ், அந்த விழாவுக்கு வந்த பலரின் கவனத்தை ஈர்த்தது. விதவிதமான நெக்லஸ், கம்மல்கள் போன்றவற்றை செய்யத் துவங்கினேன்; அவற்றை பார்த்த பலர், தங்களுக்கும் செய்து தர கேட்டனர். இந்நிலையில், 2013ல், சென்னை வந்து விட்டோம். வந்த பிறகும், அமெரிக்க நண்பர்களிடம் இருந்து, 'ஆர்டர்'கள் வந்த வண்ணமாக இருந்தன. தரமான மூலப் பொருட்களை வைத்து, ஆபரணங்கள் செய்யத் துவங்கினேன்.

'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், பிசினஸ் பக்கம் ஒன்றை துவக்கி, அதில் நான் செய்த நகைகளின் புகைப்படங்களை பதிவு செய்யத் துவங்கினேன். அமெரிக்காவிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்தன.இதையே பெரிய அளவில் தொழிலாகச் செய்வது என முடிவு செய்து, 'நவ்ரா பீட்ஸ்' நிறுவனத்தை, 2014ல் துவக்கினேன். அதே பெயரில், இணையதளத்தையும் அமைத்து, அதில் நகைகள் விபரத்தை பதிவிட்டேன். பிசினஸ் வட்டம் வளரத் துவங்கி, வெற்றி பெற்று, சாதனை அளவுக்கு உயர்ந்து விட்டேன்.

என்னிடம் செயற்கை நகைளை வாங்கிய பெண்களுக்கு, தாங்களே அவற்றை செய்யும் ஆசை வந்தது. அவர்களுக்கு தேவையான பாசி, மணி போன்றவற்றை, மொத்தமாக வாங்கி விற்கத் துவங்கினேன். இப்போது என்னிடம், 5,000 பேர், மூலப் பொருட்களை வாங்குகின்றனர்; 500 பேர், எங்கள் நகைகளை வாங்கி விற்கின்றனர். வேலைக்கு போய் கொண்டிருந்த போது கிடைத்ததை விட, இப்போது அதிக மனநிறைவு கிடைத்துள்ளது. என்னாலும் பல பெண் தொழில் முனைவோரை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையே, அந்த மனநிறைவை தந்துள்ளது!

தொடர்புக்கு: 91521 83258

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X