பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜன 10, 2020
Advertisement

கலைஞர்களுக்கு நினைவுப்பரிசுமாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், டிசம்பர் - ஜனவரியில் நடத்தும், நாட்டிய விழாவில், தமிழகம் உட்பட, பல மாநில கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த கலைக்குழுக்களுக்கு, சன்மானத்துடன், விழா பங்கேற்பு நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. தற்போதைய விழாவிலும், பங்கேற்கும் கலைஞர்களுக்கு, சுற்றுலா துறை, நினைவு பரிசு வழங்குகிறது.

கடற்கரைக் கோவில், நாட்டிய பெண் கலைவடிவத்தை நினைவு பரிசாக பெறும் கலைஞர்கள், அரசு சார்பில் பரிசு பெறுவதை கவுரவமாக நினைக்கின்றனர்.மார்கழி திருவாதிரை திருமஞ்சனம்ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மார்கழி, திருவாதிரை திருமஞ்சனம், நேற்று நடந்தது.இதில், பால், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், ராமானுஜரின் தானுகந்த திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு திருமஞ்சனம் தீர்த்தம் வழங்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜைதிருப்போரூர்: திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியில், இரு வகுப்பறை கட்டுவதற்காக, 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று, அந்த கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. திருப்போரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., இதயவர்மன் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.அதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 100 இருக்கைகளுடன் கூடிய மேஜை, 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.

மரக்கன்றுகள் வழங்கிய வங்கி கிளைகாஞ்சிபுரம்: தனலட்சுமி வங்கியின், 93வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பொது மக்களுக்கு மரக்கன்றுகளை, வங்கி கிளைகள் வழங்கி வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கும், தனலட்சுமி வங்கியின் கிளை சார்பில், பொதுமக்களுக்கு, 93 மரக்கன்றுகளை, வங்கியின் மேலாளர் சொக்கலிங்கம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X