'பிரெக்ஸிட்' மசோதாவுக்கு முதல் வெற்றி

Added : ஜன 10, 2020
Advertisement

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான, கன்சர்வேட்டிவ் கட்சி, வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.

இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான, 'பிரெக்ஸிட்' மசோதா, அந்நாட்டு பார்லிமென்டின் 'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனப்படும் கீழ் சபையில், தாக்கல் செய்யப்பட்டது.இம்மசோதாவுக்கு ஆதரவாக 330 ஓட்டுகளும், எதிராக 231 ஓட்டுகளும் பதிவாகின. இதையடுத்து, 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்' எனப்படும் மேல்சபையின் ஒப்புதலுக்கு, அனுப்பி வைக்கப்படுகிறது.அங்கும், மசோதா நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X