பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று


ஜனவரி 11, 1966


லால்பகதுார் சாஸ்திரி: உத்தரபிரதேச மாநிலம், முகல்சராய் என்ற ஊரில், சாரதா பிரசாத் ---- ராம்துலாரி தேவி தம்பதிக்கு, 1904, அக்., 2ல் பிறந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில், மத்திய போக்குவரத்து, தொலைத் தொடர்பு, வணிகம், தொழில் துறை, உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ரயில்வே அமைச்சராகவும் இருந்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள அரியலுாரில் நடந்த ரயில் விபத்தில், 144 பேர் பலியாகினர். விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து, சாஸ்திரி விலகினார்.

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேரு, 1964ல் காலமானார். அவருக்கு அடுத்ததாக, லால் பகதுார் சாஸ்திரி, நாட்டின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், அப்போதைய சோவியத் யூனியனில் இருந்த, உஸ்பெகிஸ்தான், தாஷ்கென்ட்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கு, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், 1966, ஜன., 11ல் காலமானார்.

அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜன-202019:55:55 IST Report Abuse
Bhaskaran நேருவின் உதவியாளராக இருந்த எம் .ஓ மத்தாய் .எழுதிய நூலில் பாக்கிஸ்தான் இந்திய போரின்போது பாக்கிஸ்தான் விஷவாயு குண்டை டெல்லியில் போடுவார்கள் என்னும் வதந்தி பரவியதால் சாஸ்திரியும் avar குடும்பமும் ஜனாதிபதி மாளிகையிலுள்ள அண்டர் கிரௌண்ட் அறையில் பதுங்கிக்கொண்டார்களாம் ஆனால் குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனோ .அப்படி ஒரு நிலைமை வரும் ஆனால் நான் மக்களோடுமக்களாக அந்த காற்றை சுவாசித்து இறந்துபோகிறேன் என்று தைரியமாக இருந்தார் என்று படித்தேன் .உண்மை என்னவோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X