செய்தி சில வரிகளில்...

Added : ஜன 10, 2020
Advertisement

ம.பி., கோஷ்டி பூசலுக்கு தீர்வு

போபால்: மத்தியபிரதேச மாநில காங்கிரசில், அம்மாநில முதல்வர் கமல்நாத்தும், முன்னாள் எம்.பி., ஜோதிராதித்ய சிந்தியாவும், எதிரெதிர் துருவங்களாக செயல்படுகின்றனர். ம.பி., சட்டசபைத் தேர்தல் முடிவின்போது, முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி எழுந்தபோது, கமல்நாத்தே அப்பதவியைக் கைப்பற்றினார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில், சிந்தியா தோல்வி அடைந்தார். இதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டுமென, போர்க்கொடி உயர்த்தினார்.இதை, காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை. அவர் பா.ஜ.,வில் சேரப்போகிறார் என, செய்திகள் வெளியாகின. இந்நிலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுஉள்ளது. வரும், ஏப்ரலில் நடைபெறவுள்ள ராஜ்ய சபா தேர்தலில், சிந்தியாவுக்கு, 'சீட்' தந்து, எம்.பி.,யாக்க, கமல்நாத் முன்வந்து உள்ளார். அதே நேரத்தில், மாநில தலைவர் பதவியை சிந்தியா கேட்க கூடாது என்ற நிபந்தனையையும் அவர் விதித்துள்ளார்.

சந்தா கோச்சார் சொத்து முடக்கம்

புதுடில்லி: பண மோசடி வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சந்தா கோச்சாரின், 78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சந்தா கோச்சார் மீது, சி.பி.ஐ., பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லங்கேஷ் கொலை: ஒருவர் கைது
தன்பாத்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 2017ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை, 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தை சேர்ந்த குற்றவாளி ரிஷிகேஷ் தீவேர்கர் என்கிற ராஜேஷ் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், தன்பாத்தில் உள்ள, 'பெட்ரோல் பங்க்' ஒன்றில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து, போலீசார் சுற்றி வளைத்தனர்.

பலாத்காரம்: 2 பேருக்கு துாக்கு

பரேய்லி: உத்தர பிரதேச மாநிலம், பரேய்லியில் உள்ள நவாப்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்த, 4 வயது தலித் சிறுமி, கடந்த 2016ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், உமா காந்த், 32, முராரி லால், 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும், துாக்கு தண்டனை விதித்து, உள்ளூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

விபச்சார வழக்கில் நடிகை கைது

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையின் புறநகரான கோரேகாவ்ன் என்ற இடத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த இரண்டு பெண்களை கைது செய்தனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு பெண்களை, 'சப்ளை' செய்து வந்த, 'பாலிவுட்' நடிகை அம்ரிதா தனேவா, 32, மற்றும் விளம்பர. 'மாடல்' ரிச்சா சிங் ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.

எல்லையில் தாக்குதல்: 2 பேர் பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் என்ற இடத்தில், ராணுவ ஊழியர்கள் சிலர், பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாக்., படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில், இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

ஏ.டி.எம்.,மில் தீ: ரூ.6 லட்சம் நாசம்

முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரின் டாடியானா என்ற கிராமத்தில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மின் கசிவு ஏற்பட்டதால், ஏ.டி.எம்., அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், இயந்திரம் எரிந்து நாசமானதில், அதில் இருந்த, 6 லட்சம் ரூபாய் பணம், தீக்கிரையானது. இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள ராதாகிஷன்புரா என்ற கிராமத்தில், எச்.டி.எப்.சி., - ஏ.டி.எம்., நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டது. இயந்திரத்தில் இருந்த, 8 லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X