மோடி தொகுதியில் கைதானவர்களுடன் பிரியங்கா சந்திப்பு

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Congress,PriyankaGandhi,Varanasi,Priyanka,PM,Modi, PrimeMinister,NarendraModi,மோடி,பிரியங்கா,வாரணாசி

வாரணாசி: ''அரசியல் சட்டத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில், சமீபத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, போராட்டங்கள் நடந்தன. இதில், வன்முறைகள் ஏற்பட்டு, 19 பேர் இறந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வாரணாசிக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா நேற்று சென்றார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, கைதானவர்களை சந்தித்து பேசினார்.


latest tamil newsபின், நிருபர்களிடம் பிரியங்கா கூறுகையில், ''அரசியல் சட்டத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டுக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நினைத்து, பெருமைபடுகிறேன்,'' என்றார். பின்னர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிரியங்கா, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சென்றார்.


latest tamil news
நாடகமாடுகிறார்:


வாரணாசிக்கு பிரியங்கா சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தது பற்றி, பா.ஜ., செய்தி தொடர்பாளர், சம்பித் பாத்ரா கூறியதாவது: அரசியலில் களமிறங்கிய, சில மாதங்களுக்குள்ளேயே, பிரியங்கா, சிறப்பாக நாடகமாடி வருகிறார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சந்திக்க, அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், 100க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளன. பிரியங்காவும், இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஆனால், குழந்தைகளை இழந்த தாய்மார்களின் வலியை அவரால் உணர முடியவில்லை. அவர்களை சந்திக்கவும், அவருக்கு நேரம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-ஜன-202014:12:16 IST Report Abuse
bal திருட்டுப்பயலுங்க கூடத்தான் எப்போதும் இந்த குடும்பம் சகவாசம் வைத்துக்கொள்ளும் என்பது நிரூபணம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
11-ஜன-202022:29:26 IST Report Abuse
unmaitamil இவரை பார்த்தால் இந்திராவை போல் உள்ளது என சில குருடர்கள் சொல்கிறார்கள். ஆனால் பலர், இவரை பார்த்தால் இரண்டும்கெட்டான் போல் உள்ளது என்கின்றனர் . உண்மைதான்.
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா சரி, இந்தக்கா ஏன் எப்போ பாரு ஜெயிலுக்கு போனவன், குற்றவாளிகளை வீடு தேடிப்போய் சந்திக்குது? இனம், இனத்தோடு தான் சேருகிறதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X