உறுப்புகள் தானம் மனு தள்ளுபடி

Added : ஜன 10, 2020
Advertisement

புதுடில்லி,: மருத்துவ மாணவி 'நிர்பயா' கொலை வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் உடல் உறுப்புகளை தானம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவை, டில்லி கோர்ட் தள்ளுபடி செய்தது.

டில்லியில், 2012ல், ஆறு பேர் கொண்ட கும்பல், ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. பாதிக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். 'நிர்பயா' என அழைக்கப்பட்ட மாணவியின் கொலை வழக்கில், முகேஷ், பவன் குப்தா உள்ளிட்ட, நான்கு பேருக்கு, ஜனவரி, 22ம் தேதி துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.துாக்கிலிடப்படும், நான்கு பேரின் உடல் உறுப்புகளை தானம் பெறுவது தொடர்பாக, டில்லி கோர்ட்டில், தொண்டு நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, எனக் கூறி, நீதிபதி சதீஷ்குமார் அரோரா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X