அணு ஆயுத ஒப்பந்தம்: மடங்குமா ஈரான்? ஐரோப்பிய அமைச்சர்கள் ஆலோசனை!

Added : ஜன 10, 2020
Advertisement

பிரஸ்சல்ஸ்: மேற்காசிய நாடான ஈரானை, அணு ஆயுத ஒப்பந்தத்தில் கொண்டு வருவது குறித்து விவாதிக்க, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், 'நேட்டோ' பொதுச் செயலர் உள்ளிட்டோர், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்சல்சில், அவசர கூட்டம் நடத்துகின்றனர்.

'வல்லரசு நாடுகளுடன், 2015ல் போடப்பட்ட அணு ஆய்த ஒப்பந்தத்தின் கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்படியப் போவதில்லை' என, ஈரான் அரசு சமீபத்தில் அறிவித்தது.இந்நிலையில், ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்திற்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்க, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் 'நேட்டோ' பொதுச் செயலர் உள்ளிட்டோர், பெல்ஜியம் தலைநகரில் கூடி விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், மேற்காசிய நாடான, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற, பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம், ஈராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி, தொலைபேசியில் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.உக்ரைன் விமான விபத்துஅமெரிக்கா தந்தது தகவல்மேற்காசிய நாடான ஈரானில் இருந்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் நோக்கி புறப்பட்ட பயணியர் விமானம், சமீபத்தில் விபத்துக்குள்ளானதில், 176 பேர் பலியாகினர். ஈரான் தவறுதலாக நடத்திய ஏவுகணை தாக்குதலில், விமானம் தகர்க்கப்பட்டதாக, அமெரிக்கா மற்றும் கனடா குற்றஞ் சாட்டியது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறு, அமெரிக்கா மற்றும் கனடாவை கேட்டுக் கொண்டுள்ளது.இதற்கிடையே, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், ''விமான விபத்து குறித்த முக்கிய தகவலை, உக்ரைன் அரசிடம், அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, அது பற்றி விபரம் கூறி முடியும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X