ஹாரி பிரச்னைக்கு தீர்வு உண்டா? பிரிட்டன் அரச குடும்பம் தவிப்பு!

Added : ஜன 10, 2020
Advertisement
 ஹாரி பிரச்னைக்கு தீர்வு உண்டா? பிரிட்டன் அரச குடும்பம் தவிப்பு!

லண்டன்,: அரண்மனையிலிருந்து வெளியேறும், இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி முடிவுக்கு தீர்வு காண முடியாமல், பிரிட்டன் அரச குடும்பம் பரிதவிக்கிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லசுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வில்லியம்ஸ், இரண்டாவது மகன் ஹாரி, 35. ஹாரியின் மனைவியான மேகன், 38, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை. கடந்த, 2018ல் ஹாரி மற்றும் மேகனுக்கு திருமணம் நடந்தது.

தற்போது, அவர்களுக்கு எட்டு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.அரச குடும்ப வழக்கப்படி, சசக்ஸ் கோமானாக இளவரசர் ஹாரி உள்ளார். இந்நிலையில், ராஜ வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக, ஹாரி மற்றும் மேகன், நேற்று முன்தினம் அறிவித்தனர்.ஆனால், அதற்கான காரணத்தை, அவர்கள் கூறவில்லை. சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும், சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஹாரி தம்பதி, ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் உட்பட யாரிடமும் ஆலோசனை கேட்காமல், இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அவர்களுடைய முடிவு, பிரிட்டன் அரச குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதையடுத்து, ராணி எலிசபெத்தும், இளவரசர் சார்லசும் ஹாரியிடம் பேசும்படி, பிரதமர் ஜான்சனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். ஹாரியை சமாதானப்படுத்தி, குடும்பத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க, வேறு வழிகளையும், அரச குடும்பத்தினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X