பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் நெசவு தீவிரம்

Added : ஜன 10, 2020
Advertisement

ஆர்.கே.பேட்டை : நெசவின் பெருமையை, இன்றும் தாங்கி பிடித்து நடத்தும் நெசவாளர்கள், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தீவிர நெசவில் ஈடுபட்டுள்ளனர்.

நெசவு தொழிலை, பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் நெசவாளர்கள், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஏராளமானோர் உள்ளனர்.தை மாதத்தை, தொழிலின் துவக்கமாக வைத்து, இவர்கள், வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பின், நல்ல நாள் பார்த்து தொழிலை துவங்குவது வழக்கம்.இன்னும் சில நாட்களில், தை மாதம் பிறக்கவுள்ளதால், நடப்பு ஆண்டின் இறுதிக்கட்ட நெசவில், நெசவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:போகி பண்டிகை வரை, இரவு - பகலாக நெசவுப்பணி தொடரும். இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை வைத்து, பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவோம்.

பின், தொடரும் விடுமுறை கால செலவையும், அந்த வருவாயை கொண்டு சமாளிப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கடந்த நுாற்றாண்டில், வீட்டுக்கு வீடு தறிக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. அக்கம் பக்கத்தில் உள்ள நெசவாளர்கள், போட்டி போட்டு நெசவில் ஈடுபட்டனர். தற்போது, தெருவுக்கு ஒன்றிரண்டு கூடங்கள் மட்டுமே உள்ளதால், தங்களின் தொழில் வேகத்தை, தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய நிலையில், நெசவாளர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X