இந்தியாவிடம் பஸ்கள் வாங்கும் இலங்கை

Added : ஜன 10, 2020
Advertisement

கொழும்பு: இந்தியாவிடம் இருந்து, 500 பஸ்களை இலங்கை அரசு வாங்குகிறது. இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே, முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த நவம்பரில் இந்தியா வந்தார்.பிரதமர் மோடியை, அவர் சந்தித்த நிலையில், இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு, 3,150 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவி அளிப்பதாக மோடி அறிவித்தார்.

இந்நிதியில், 105 கோடி ரூபாய் மதிப்பில், 500 பஸ்களை இந்தியாவிடம் இருந்து வாங்க, அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.அவற்றில், 54 பயணியர் அமரும், 400 பஸ்களும், 35 பயணியர் அமரும், 100 பஸ்களும் வாங்கப்படும் என, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X