பொது செய்தி

தமிழ்நாடு

பழவேற்காடு கடற்கரையில் குப்பை

Added : ஜன 10, 2020
Advertisement

பழவேற்காடு : பழவேற்காடு கடற்கரையில், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைகின்றனர்.பழவேற்காடு சுற்றுலா பகுதியை பார்வையிடுவதற்காக, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பயணியர் வருகின்றனர்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வரும் பயணியர், இங்குள்ள கடற்கரை பகுதியில் அமர்ந்து, கடல் அழகை ரசித்தும், மணலில் விளையாடியும் மகிழ்கின்றனர்.கடற்கரை பகுதிகளில், மீனவ கிராமங்களின் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், கடற்கரை பொலிவிழந்து வருகிறது.விடுமுறை நாட்களில், இளைஞர் கூட்டம், கடற்கரையில் அமர்ந்து குடித்து விட்டு, மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால், கண்ணாடி சில்லுகள் சிதறிக் கிடக்கின்றன.

கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களை பார்த்து, சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைகின்றனர். கடற்கரை பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும், புத்தாண்டு, காணும்பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளை வைக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X