பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை செயல்பாடு மாணவர்களுக்கு விளக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement

ஊத்துக்கோட்டை : கிராமம் மற்றும் நகர்ப்புற அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு மருத்துவமனைக்குச் சென்று, அதன் செயல்பாடு குறித்து அறிந்து கொண்டனர்.

தாராட்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும், 20 மாணவ - மாணவியர், ஊத்துக்கோட்டை அரசு நிதி உதவி பெறும் கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றனர்.அங்கு, இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியரும் கலந்துரையாடினர்.பள்ளி பரிமாற்ற திட்டத்தில், படிப்பது மட்டுமின்றி, பிற செயல்பாடுகளை தெரிந்து கொள்ளும் வகையில், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, அம்மாணவ - மாணவியர் அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, நோயாளிகள் சென்றவுடன் என்ன செய்ய வேண்டும், தாங்கள் வசிக்கும் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது.

கடம்பத்துார் ஒன்றியம், வெண்மனம்புதுார், எறையாமங்கலம், கூவம், உளுந்தை, வயலுார் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவ - மாணவியர், முறையே தென்கரணை, சத்தரை, கடம்பத்துார் வடக்கு, போளிவாக்கம், திருமணிக்குப்பம் ஆகிய அரசு பள்ளிக்கு, பள்ளி பரிமாற்ற திட்டத்தில் சென்று, கலந்துரையாடினர்.காஞ்சிபுரம்: தழையம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர், வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, நேற்று பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிக்கு வந்தனர்.அங்கு, கணினி இயக்குவது, யோகா, விளையாட்டு, நுாலகத்தில் புத்தகம் வாசிப்பு ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X