ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின், கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

தமிழகத்தில், சமீபத்தில், 27 மாவட்டங்களில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, கடந்த, 3ம் தேதி நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நடந்த இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதித்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X