பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் பாதிப்புக்கு நிவாரணம் விவசாயிகள் பேரணி

Added : ஜன 10, 2020
Advertisement

பொன்னேரி : புகையான் நோய் தாக்கியதால் கருகிய பயிருக்கு, நிவாரணம் மற்றும் காப்பீடு தொகை வழங்க கோரி, விவசாயிகள் நேற்று, பேரணி சென்றனர்.

மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், சம்பா பருவத்திற்கு, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சில தினங்களாக, நெற்பயிரில் புகையான் நோய் தாக்கி, காய்ந்து கருகி வருகிறது.நோய் தாக்கிய பயிரை அறுவடை செய்தால், ஐந்து மூட்டை நெல் கூட கிடைக்காது என்பதால், விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.இதனால், புகையான் பாதிப்பால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, அரசு, நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு வழங்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பொன்னேரியில் நேற்று, பேரணி சென்றது.

மாநில தலைவர் சின்னசாமி தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருவொற்றியூர் சாலை வழியாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்றனர்.வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம், கருகிய நெற்பயிரை காட்டி, நிவாரணம் வழங்கவும், பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மனுக்களை பெற்ற அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X