பொது செய்தி

இந்தியா

சீனா, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை: அரபிக்கடலில் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (18)
Advertisement
INSVikramaditya,China,Pakistan,India,இந்தியா,சீனா,பாகிஸ்தான்,விக்ரமாதித்யா

புதுடில்லி: சீனா மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அரபிக்கடலில், ஆயுதம் தாங்கிய போர் கப்பல், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை நிறுத்தி வைக்க, இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படையின் சார்பில், இந்தியாவிற்கு எதிராக, கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பல்வேறு எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, சீனாவும் ஒத்துழைப்பு அளிக்கிறது. இதன்படி. இரு நாட்டு கடற்படைகளும், வடக்கு அரபிக்கடல் பகுதியில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இதையடுத்து, இந்தியா சார்பில், அரபிக்கடலில், ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2013ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா, 284 மீட்டர் நீளமும், 44 ஆயிரத்து 500 டன் எடையும் கொண்டது. இதில், 20க்கும் மேற்பட்ட, போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும், மிக் 29கே ரக விமானங்களை நிறுத்தலாம். இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படை அத்துமீறல்கள் தடுக்கப்படும் என, இந்திய கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய் ஸ்ரீ ராம் அருமை. பாக்கியும் சீனாவும் நம்மை சீண்டுமே தவிர போருக்கு வராது. இந்தியாவில் சீன சந்தை பரந்து விரிந்துள்ளது. பாக்கி சொல்லவே வேண்டாம் சோத்துக்கே வழியில்லை. இந்த கப்பலை பார்த்தால் சீண்டவும் யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
11-ஜன-202011:56:13 IST Report Abuse
Ravichandran வளரட்டும் தேசத்தி பெருமை, இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-ஜன-202009:42:25 IST Report Abuse
Nallavan Nallavan இந்தப் போர்க்கப்பல் காங்கிரஸ் ஆட்சியில் நமது கடற்படையில் இணைக்கப்பட்டது ...... ஆகவே பாஜக அரசுக்குப் பெருமை இல்லை ....... இப்படிக்கு வீரத் தமிழன் ......
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
11-ஜன-202016:02:46 IST Report Abuse
Srinivasநல்லவரே...நம் மத்திய அரசு செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்னும் பல உள்ளது. சீனாக்காரனின் மொத்த ஆதரவும் பக்கிக்கு உள்ளது. இந்தியா வளர்வதை சீனாக்காரன் விரும்பாத காரணத்தால் பக்கிக்கு ஆதரவு அளித்து தொல்லை கொடுக்கிறான். அதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அமெரிக்க செய்ததுபோல் நம் நாடும் சீனாக்காரனிடமிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவேண்டும். இல்லையென்றால் மேக் இன் இந்தியா என்பதை காரணம் காட்டி அவனிடமிருந்து இறக்குமதி தவிர்த்து நம் நாட்டில் உற்பத்தி செய்வதை அதிகரிக்கவேண்டும். சீனாக்காரனிடமிருந்து கைபேசி நிறுவனமான சாம்சங் வெளியேறி இந்தியாவில் உற்பத்தியை தொடங்க உள்ளது நல்ல விஷயம். 5 ஜிக்கு அவன் நிறுவனமான ஹுவாய்க்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது. அவன் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்க நம் நாடு ஒரு காரணமாக இருக்கக்கூடாது. படிப்படியாக சீனாக்காரனின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதை நம் நாடு குறைக்கவேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நம் நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தவேண்டும். தகவல் தொழில் நுட்ப உற்பத்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் சீனாக்காரனை சார்ந்திருப்பதை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறவேண்டும். அவன் நாட்டு நிறுவனங்களின் உற்பத்திக்கான மிகப்பெரும் சந்தையாக இந்தியா இருப்பது நாட்டிற்கு ஆபத்து மட்டுமல்ல அவன் பொருளாதார வளர்ச்சியில் நம் பங்கு அதிக அளவில் இருந்து அதுவே நம்மைச்சுற்றி அவனின் ஆயுத பலம் பெருகி நம் நாட்டை கவலைக்குள்ளாக்கி, ஆயுத கொள்முதலில் அதிக அளவு செலவு செய்யவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. சீனாக்காரனின் குடைச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் பல திட்டங்கள் இருக்கலாம்.... பார்ப்போம்......
Rate this:
Share this comment
ஜெய் ஸ்ரீ ராம்இருந்துட்டு போவட்டும். உபயோகம் தெரியாமல் வாங்கி விட்டார்கள். பா.ஜ சரியாக பயன்படுத்துகிறது....
Rate this:
Share this comment
ஜெய் ஸ்ரீ ராம்இருந்துட்டு போவட்டும். உபயோகம் தெரியாமல் வாங்கி விட்டார்கள். பா.ஜ சரியாக பயன்படுத்துகிறது....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஜன-202006:54:12 IST Report Abuse
Anandanநாட்டின் பாதுகாப்பிற்கு காங்கிரஸ் எதுவுமே செய்யலனைனு அழுவுறது சங்கிகளின் வழக்கம் ஆனா இப்போ சொல்றாங்க அதே சமயம் இவங்க எந்த போர்கப்பலையும் இதுவரையில் வாங்கலை அப்படிங்குறதை சொல்லவேமாட்டாங்க....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-ஜன-202006:55:03 IST Report Abuse
Anandan//இருந்துட்டு போவட்டும். உபயோகம் தெரியாமல் வாங்கி விட்டார்கள். பா.ஜ சரியாக பயன்படுத்துகிறது....// ஆமாம் இவ்வளவு நாள் அது அலமாரியில் தூங்கிச்சு. உளறிக்கொட்டுவதுற்கும் ஒரு அளவு வேணும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X