சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரிவர பராமரிக்கப்படாத மதகுகள்

Added : ஜன 11, 2020
Advertisement

பருவமழையால் மாடம்பாக்கம் பெரிய ஏரி நிரம்பி உள்ள நிலையில், மதகுகள் பராமரிப்பில் பொதுப் பணித்துறை கோட்டை விட்டதால், ஏரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. இது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, புறநகரில் உள்ள, மாடம்பாக்கம் பேரூராட்சியில், 250 ஏக்கர் பரப்பளவில், பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரி, மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தஞ்சேரி ஆகிய பகுதிகளின், நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.இதை நம்பி, 650 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்றன. தற்போது, 400 ஏக்கருக்கும் குறைவாக, இவை சுருங்கிவிட்டது. 25 ஆண்டுகளுக்கும் மேல், ஏரி துார் வாரப்படாத நிலையில், 2019 ஏப்ரலில், அரசு உத்தரவுபடி, இந்த ஏரிக்குள் மண் எடுக்கும் பணிகள் நடந்தன.அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட, மண் எடுக்கப்பட்டதுடன், ஏரியின் ஒருபுறம் மட்டுமே, கரைகள் சீரமைக்கப்பட்டன;

மறுபுறம் சேதமடைந்திருந்த கரைகள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்படவில்லை.இதனால், தற்போது ஏரி நிரம்பி வீணாக, வெளியேறி வருகிறது.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஏரியின் வடக்கு திசையில், ராஜம்மாள் நகர் பூங்கா பின்புறம் உட்பட, நான்கு இடங்களில் உள்ள, மதகுகள் சேதமடைந்துள்ளன. அங்குள்ள கலங்கல் பகுதியும் உயர்த்தி அமைக்கப்படவில்லை.பொதுப்பணித் துறையிடம் இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், ஏரி நீர் முழுதும், வீணாக வெளியேறி வருகிறது. இது, வேதனையை அளிக்கிறது.

பருவமழையால், இரண்டு போக விவசாயம் செய்ய முடியும் என, நம்பியிருந்த எங்களுக்கு, இந்த நீர் வெளியேற்றம், ஏமாற்றத்தை அளித்துள்ளது.ஏற்கனவே, 2017 முதல் இரண்டு ஆண்டுகளாக, சரிவர மழை இல்லாத நிலையில், பருவமழை கைகொடுத்தும், நடப்பு சம்பா பருவத்தில், 70 ஏக்கருக்கும் குறைவாகவே, விவசாயம் நடந்து வருகிறது.ஏரி பராமரிப்பில் இதே அலட்சியம் நீடித்தால், எதிர்காலத்தில் மாடம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயம் முற்றிலும் அழிய நேரிடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X