தமிழ்நாடு

சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் ரயில் பாதையில் மண் ஆய்வு பணி

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020
Advertisement
சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் ரயில் பாதையில் மண் ஆய்வு பணி

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதையில், மண் ஆய்வு பணி துவங்கியது.சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, புதிய பாதை கட்டுமான பணி நடந்து வருகிறது.விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பஸ் நிலையம் வரை, 15.3 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.இதனையொட்டி, விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, மெட்ரோ பாதை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து, தனியார் நிறுவனத்தால், ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனையொட்டி, தமிழக அரசு, இப்பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது. இப்பாதையில், மெட்ரோ நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனத்தால், மண் ஆய்வு பணி துவங்கப்பட்டுள்ளது. இதில், தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை ஆகிய பகுதி களில், ஜி.எஸ்.டி., சாலையில், மண் ஆய்வு பணி நடக்கிறது. இப்பணி, நான்கு மாதத்தில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என, ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X