பொது செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை சட்ட விவகாரம் முதல்வரை சந்தித்து மனு

Added : ஜன 11, 2020
Advertisement
  குடியுரிமை சட்ட விவகாரம் முதல்வரை சந்தித்து மனு

சென்னை,: 'குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள், நேற்று முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து மனு அளித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும், எதிர்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. தமிழகத்திலும், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்விவகாரம், சட்டசபை கூட்டத்திலும் எதிரொலித்தது. 'தமிழகத்தில், சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது. பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசு முதலில் குரல் கொடுக்கும்' என, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம், முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, மனு அளித்தனர்.அதைத் தொடர்ந்து, நேற்று முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து, மனு அளித்தனர். தொழிலாளர் நல துறை அமைச்சர் நிலோபர் கபில், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபூபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உடனிருந்தனர்.முகமது அபூபக்கர் கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள், முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடுகள் குறித்து, முதல்வரிடம் எடுத்துரைத்தோம்.அதை கேட்ட முதல்வர், மத்திய அரசிடமிருந்து, இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. தாங்கள் கூறிய விபரங்கள் அடிப்படையில், விரைவில், சட்ட வல்லுனர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என, உறுதி அளித்தார். தமிழக அரசு, நல்ல முடிவு எடுக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X