உள்நோக்கம் இல்லை : துணை முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உள்நோக்கம் இல்லை' ': துணை முதல்வர்

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020
 'உள்நோக்கம் இல்லை' ': துணை முதல்வர்

சென்னை, விமான நிலையத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி:மத்திய உள்துறை, எனக்கு பாதுகாப்பு அளித்திருந்தது. தற்போது, பாதுகாப்பு தேவையில்லை எனக் கருதியுள்ள காரணத்தால், அதை விலக்கிக் கொண்டது. என்னை பொறுத்தவரை, பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு, எந்த உள்நோக்கமும் இல்லை. தேவையில்லை என, மத்திய உள்துறை கருதியதால், விலக்கி கொள்ளப்பட்டது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மாநிலமாக, தமிழகம் தொடரும். குடியுரிமை திருத்த சட்டத்தில், எங்களின் நிலையான, உறுதியான நிலைப்பாட்டை, சட்டசபையில் அறிவித்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை மக்களுக்கு, சிறு இடர்பாடு கூட வராமல், அரசு, அவர்கள் நலனை பாதுகாக்கும் என, சட்டசபையில் உறுதி அளித்துள்ளோம். ஆங்கிலோ இந்தியருக்கு, சட்டசபையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.***சென்னை, ஜன. 11-

சென்னை, விமான நிலையத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி:மத்திய உள்துறை, எனக்கு பாதுகாப்பு அளித்திருந்தது. தற்போது, பாதுகாப்பு தேவையில்லை எனக் கருதியுள்ள காரணத்தால், அதை விலக்கிக் கொண்டது. என்னை பொறுத்தவரை, பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு, எந்த உள்நோக்கமும் இல்லை. தேவையில்லை என, மத்திய உள்துறை கருதியதால், விலக்கி கொள்ளப்பட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மாநிலமாக, தமிழகம் தொடரும். குடியுரிமை திருத்த சட்டத்தில், எங்களின் நிலையான, உறுதியான நிலைப்பாட்டை, சட்டசபையில் அறிவித்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை மக்களுக்கு, சிறு இடர்பாடு கூட வராமல், அரசு, அவர்கள் நலனை பாதுகாக்கும் என, சட்டசபையில் உறுதி அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X