பொது செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு 48, 'ஏசி' பஸ்கள்

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை : சென்னையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ள நவீன, 'ஏசி' பஸ்சை, முதல்வர் இ.பி.எஸ்., பார்வையிட்டார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், நவீன வசதிகளுடன் கூடிய, 48 ஏசி பஸ்கள், விரைவில் இயக்கப்பட உள்ளன. நேற்று முன்தினம், ஒரு பஸ், முதல்வர் பார்வைக்காக, தலைமைச் செயலகம் கொண்டு வரப்பட்டது.முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பஸ்சை பார்வையிட்டனர். முதல்வர் பஸ்சில் அமர்ந்து, சிறிது துாரம் பயணித்தார். போக்குவரத்து துறை செயலர் சந்திரமோகன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பஸ்சில், 40 பேர் அமர்ந்த நிலையில் பயணம் செய்யலாம். பஸ் நிறுத்தம் வரப்போவதை, முன்னதாக அறிவிக்க, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய, 'ஏசி' பஸ்கள், பொங்கல் முதல் இயக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X