அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு: விஜயகாந்த் வழங்கல்

Added : ஜன 11, 2020
Advertisement
   பொங்கல் பரிசு: விஜயகாந்த் வழங்கல்

சென்னை; தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி தலைவர் விஜயகாந்த், பொங்கல் பரிசு வழங்க உள்ளார்.

அக்கட்சி அறிக்கை:அனைவரிடமும் ஒற்றுமையை போற்றும் வகையில், எல்லா பண்டிகைகளையும், தே.மு.தி.க., சார்பில் கொண்டாடுவது வழக்கம். உழைப்பின் மகிமையை, உலகிற்கு எடுத்துக்காட்டும் பொங்கல் பண்டிகையை, இந்தாண்டும், தே.மு.தி.க., கொண்டாடவுள்ளது. சென்னை, கொரட்டூர் பஸ் நிலையம் அருகில், விஜயகாந்த் தலைமையில், நாளை பொங்கல் விழா நடக்கவுள்ளது. இதில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்கள், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதேபோன்று, அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X