கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாலை டெண்டரில் முறைகேடு?: அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை: சென்னையில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான, 'டெண்டர்' முறைகேடு குறித்த புகாரில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகள் மீறல்அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:சென்னையில், பஸ் வழித்தடங்கள் மற்றும் உள்புறங்களில் சாலை அமைப்பதற்கு, ௩௭ டெண்டர்கள் விடப்பட்டன. ௩௦௦ கோடி ரூபாய் மதிப்பில், ௩,௮௦௦ சாலைகள் அமைப்பதற்கு, இந்த டெண்டர்கள் விடப்பட்டன. மழைநீர் வடிகால் அமைக்க, ௭௩ 'டெண்டர் பேக்கேஜ்' விடப்பட்டது. இதன் மதிப்பு, ௨௯௦ கோடி ரூபாய். இந்த டெண்டர்களில், மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதிக விலைக்கு, டெண்டர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் ஆதாயம் பெற, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து, டெண்டர் ஆய்வுக் குழுவின் கவனத்துக்கு வந்த உடன், அவற்றை ரத்து செய்திருக்க வேண்டும்; ஆனால், நடக்கவில்லை.சென்னை மாநகராட்சி யில் பதிவு செய்யப்பட்ட, ௫௦ ஒப்பந்ததாரர்கள் கையெழுத்திட்டு, மனு அளித்துள்ளனர். ௨௦௧௮ நவம்பரில், நாங்களும் புகார் அளித்துள்ளோம். விசாரணைஅதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.சுரேஷ் ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, ''புகார் குறித்து, ஆரம்பகட்ட விசாரணை நடக்கிறது,'' என்றார்.தள்ளி வைப்புஇதையடுத்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௧௯க்கு தள்ளி வைத்தனர். இவ்வழக்கில், உள்ளாட்சித் துறை அமைச்சரை, எதிர் மனுதாரராக சேர்ப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X