பொது செய்தி

இந்தியா

ரூ.1,450 கோடி:தேர்தல் பத்திர நிதி திரட்டி பா.ஜ., சாதனை

Updated : ஜன 12, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (17)
Advertisement
BJP,பாஜக,பாஜ,தேர்தல்_பத்திரங்கள், நன்கொடை

புதுடில்லி: மத்திய அரசு வெளியிடும் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில், பா.ஜ., தொடர்ந்து இரண்டு நிதியாண்டுகளாக, முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், காங்கிரஸ் தொடர்கிறது.

பெரு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம், அரசியல் கட்சிகள், நன்கொடை திரட்டுகின்றன. இதில், ரொக்கப் புழக்கத்தை குறைத்து, வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக, மத்திய அரசு, 2018, ஜனவரியில், தேர்தல் பத்திர வெளியீட்டு திட்டத்தை, அறிமுகப்படுத்தியது.


தேர்தல் பத்திரங்கள்:

நன்கொடை தருவோர், வங்கியில் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இத்திட்டத்தில், நன்கொடை அளிப்பவரின் பெயர் வெளியிடப்படுவதில்லை. அதேசமயம், எந்த கட்சிக்கு, எவ்வளவு நன்கொடை வந்தது என்ற விபரத்தை, தெளிவாக பெற முடியும். இந்தவகையில், 2017-18ம் நிதியாண்டில், 222 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

அதில், பா.ஜ., 95 சதவீதம், அதாவது, 210 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. கடந்த, 2018--19ம் நிதியாண்டில், மத்திய அரசு, 2,551 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வெளியிட்டது. அதில், பா.ஜ., 57 சதவீதம், அதாவது, 1,450 கோடி ரூபாய் மதிப்பிற்கு, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரசுக்கு, தேர்தல் பத்திரங்கள் மூலம், 383 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவற்றுக்கு, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 213 கோடி மற்றும் 141 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில், ஐந்தாவது இடத்தில், திரிணமுல் காங்கிரஸ் உள்ளது. இக்கட்சிக்கு, தேர்தல் பத்திரங்கள் மூலம், 97.28 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை, 99.84 கோடி ரூபாய் மற்றும் 35.25 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளன.


நன்கொடை:

மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம்சிங்கின் சமாஜ்வாதி, அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை எதுவும் பெறவில்லை என, தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன. கடந்த, 2018 மார்ச் முதல், 2019 மே வரை, மத்திய அரசு, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, தேர்தல் பத்திரங்களை வெளியிட்டு உள்ளது. தேர்தல் பத்திர வெளியீட்டின் மதிப்பில், 0.5 சதவீதம், பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தவகையில், கடந்த நிதியாண்டில், இந்த நிதியத்திற்கு, 11 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. 'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவோர் விபரங்களை வெளியிடாமல் இருப்பது, லஞ்சம், சட்ட விரோத பணப் பரிமாற்றம், கருப்பு பண புழக்கத்திற்கு துணை நிற்பது போன்றது என்பதால், தேர்தல் பத்திர திட்டத்தை தடை செய்ய வேண்டும்' என, ஜனநாயக சீர்திருத்தங்களின் கூட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இவ்வழக்கு, இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர உள்ளது. ரிசர்வ் வங்கி, தலைமை தேர்தல் ஆணையம் ஆகியவையும், தேர்தல் பத்திர நன்கொடையாளர் விபரங்களை வெளியிட, வலியுறுத்தி வருகின்றன. தற்போது வரை, தேசிய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த, 28 அரசியல் கட்சிகள் தான், 2018--19ம் நிதியாண்டு கணக்கை, இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளன. அவற்றில், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளன.


புதிய தேர்தல் பத்திரம் வெளியீடு:

மத்திய அரசு, வரும், 13ம் தேதி, புதிய தேர்தல் பத்திரங்களை வெளியிடுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், 29 கிளைகளில், 22ம் தேதி வரை, தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
12-ஜன-202000:30:52 IST Report Abuse
Charles பணம் கொடுத்தவர்கள் தொழிலதிபர்கள் என்று கூறுகிறீர்கள்... உலகத்தில் 99 சதவிகித தொழிலதிபர்கள் பலன் பார்க்காமல் எதுவும் கொடுப்பதில்லை என்பது கூற்று..
Rate this:
Share this comment
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
11-ஜன-202017:05:34 IST Report Abuse
pazhaniappan சாதனை அல்ல வேதனை , நாட்டை நடத்த பணம் இல்லை , ரெசெர்வ் வங்கியிலிருந்து , ஒரு லட்சம் கோடி அபேஸ் , LIC யின் உபரி நிதி என்று 45000 கொடிய சுருட்டல், நிதி நெருக்கடி என்று கூறி லாபத்தில் இயங்குகிற பிபிசில் போன்ற பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை என்று பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் பொது , கட்சிக்கு நிதி திரட்டியதை சாதனை என்று கூறினால் அதை எப்படி புரிந்து கொள்வது , நாட்டை முழுமையாக அளிக்கும் வரையும் , அதற்க்கு பின்பும் கூட இவர்களுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவில் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
11-ஜன-202016:31:56 IST Report Abuse
Suri இதன் பின்னணி என்ன? எப்படி வங்கிகளின் வேண்டுகோளை புறம் தள்ளினார்கள்? எப்படி சீரியல் எண் நடைமுறையை மாற்றினார்கள்? எப்படி RTI மூலம் வங்கிகள் எதிர்ப்பு வெளியில் தெரியவந்தது?
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
11-ஜன-202023:26:59 IST Report Abuse
Rajasகடப்பாரையை முழுங்கி விட்டார்கள். வெளியே எடுக்கவும் முடியவில்லை. ஜீரணிக்க கஷாயம் குடித்து கொண்டிருக்கிறார்கள். கிளறினால் பல விஷயங்கள் வரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X