கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருமா தொகுதி தபால் ஓட்டு அதிகாரிக்கு உத்தரவு

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில், நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டு களுடன், தற்போதைய தேர்தல் அதிகாரி ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, ௨௦௧௬ல் நடந்த சட்டசபை தேர்தலில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், ௮௭ ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருமாவளவன், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். மனுவில், 'விதிகளுக்கு முரணாக, ௧௦௨ தபால் ஓட்டுகளை, தேர்தல் அதிகாரி நிராகரித்தார். 'அது குறித்து, அவரிடம் கேட்டதற்கு, காரணங்களை தெரிவிக்க மறுத்து விட்டார்' என, கூறப்பட்டுள்ளது.தேர்தல் வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிக்கிறார். தேர்தல் அதிகாரியாக இருந்த ஆர்.முத்துகுமாரசாமி, வரும், ௨௦ம் தேதி ஆஜராக, 'சம்மன்' அனுப்பவும், நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகளை தாக்கல் செய்யவும், நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்

.இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, காட்டுமன்னார் கோவில் தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய முத்துகுமாரசாமி, ஓய்வு பெற்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, தற்போதைய தேர்தல் அதிகாரி, நிராகரிக்கப்பட்ட, ௧௦௨ தபால் ஓட்டுகளுடன் ஆஜராகும்படி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X