கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சீமான் ஆஜராக கோர்ட் சம்மன்

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை: முதல்வர் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், வரும், 21ம் தேதி ஆஜராகுமாறு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த செப்., 14ல், தனியார் தொலைக்காட்சிக்கு, சீமான் பேட்டி அளித்தார். அதில், முதல்வர் இ.பி.எஸ்., குறித்து அவதுாறு பரப்பும் வகையில், கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.இது குறித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன், அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதி-பதி செல்-வகு-மார் முன், விசா-ர-ணைக்கு வந்-தது. மனுவை விசா-ரித்த நீதிபதி, 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக, சீமானுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

ஸ்டாலின் மீது வழக்குஉள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியையும், தமிழக அரசையும் விமர்சித்து, 2019 டிச., 13ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேட்டி அளித்தார். அந்த பேட்டி அவதுாறு பரப்பும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது.இது குறித்து, உள்-ளாட்-சி துறை அமைச்-சர் வேலு-மணி சார்-பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாந-கர குற்-ற-வி-யல் அரசு வழக்கறிஞர் கவுரி அசோ-கன், ஸ்டாலின் மீது அவ-துாறு வழக்கு தாக்கல் செய்-துள்ளார்.இந்த மனு, விரை-வில் விசா-ர-ணைக்கு வர உள்-ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X