கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இலவச அரிசி திட்டத்துக்கு பதிலாக பணம்

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை: இலவச அரிசி வழங்குவதற்கு பதில், பணமாக வழங்கும்படி, கவர்னர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி முதல்வர் மனு தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த மனு:மாநில தேர்தலின் போது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவதாக, வாக்குறுதி அளித்தோம். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமைச்சரவையின் முதல் கூட்டத்தில், ௨௦ கிலோ அரிசியாக உயர்த்தி வழங்கு வது என, முடிவெடுக்கப்பட்டது.இதற்கான நிதியை, புதுச்சேரி அரசு தான் வழங்குகிறது. புதுச்சேரி மாநில நிர்வாகி யாக இருப்பவர், இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் இருந்து மாறுபட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இலவச அரிசி வழங்குவதை நிறுத்துவதாகவும், அதற்கு பதில் பணமாக வழங்கவும், கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பயனாளி கள் கணக்கில், பணம் வரவு வைக்கப்படுகிறது. மேலும், அரிசிக்கு பதில் பணமாக வழங்கும்படி, புதுச்சேரி அரசுக்கு ஆலோசனை வழங்கி, மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சரியல்ல; சட்டவிரோதமானது. உத்தரவை வாபஸ் பெறும்படி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன். சாதகமான பதில் எதுவும் இல்லை. எனவே, அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக, கவர்னர் எடுத்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்த, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

.இம்மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. மனு, விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பதை முடிவு செய்ய, நேற்று விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு உகந்தது தான் என்று முடிவெடுத்து, மனுவுக்கு எண் இடுமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X