பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

Added : ஜன 11, 2020
Advertisement
 எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 47 மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவிலில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் யுனிடெக் பிளாஸ்டோ பிரைவேட் லிட்., நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். வேலைவாய்ப்பு முகாமில் இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக் துறைகளில் இருந்து 37 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 23 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் ஆட்ஸ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிட்., கம்பெனியில் நேர்காணலில் இ.இ.இ., மெக்கானிக் துறையில் இருந்து 32 மாணவர்கள் பங்கேற்று, 24 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X