பொது செய்தி

தமிழ்நாடு

கழிப்பறை பராமரிப்பு தனியாருக்கு அழைப்பு

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை : சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்க, தனியார் நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள பொது கழிப்பறைகளை மேம்படுத்துதல், பராமரித்தல் தொடர்பாக, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான கூட்டம், கமிஷனர் பிரகாஷ் தலைமையில், ரிப்பன் மாளிகையில், சமீபத்தில் நடந்தது.அப்போது, கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது: சென்னையில், 853 பொது கழிப்பறைகளில், 6,641 இருக்கைகள் உள்ளன. பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியில், 2 சதவீதம், கழிப்பறை பராமரிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, விரும்பமுள்ள நிறுவனங்கள், பொதுக்கழிப்பறை பராமரிப்பை, தங்கள் நிறுவனத்தின் சொந்த செலவில் மேற்கொள்ளலாம்.

அந்த நிறுவனங்கள், விதிகளுக்கு உட்பட்டு, தங்களின் விளம்பரங்களையும், வங்கிகள் தானியங்கி இயந்திரங்களையும் வைத்து, கழிப்பறைகளை பராமரிக்கலாம்.ஆர்வமுள்ள நிறுவனங்கள், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், விருப்பமான கழிப்பறையை தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தில், ஏற்கனவே தனியார் நிறுவனம் ஒன்று, தி.நகர், பனகல் பார்க் அருகில் உள்ள, கழிப்பறையை புதுப்பித்து பராமரித்து வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X