சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 11, 2020
Advertisement

வாலிபரிடம் மொபைல் பறிப்புகோயம்பேடு: விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 38. புதுச்சேரியில் உள்ள மருந்து நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், வடபழநியில் நடந்த நிறுவனத்தின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின், விழுப்புரம் செல்ல, இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். பேருந்தில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்தபோது, நடைமேடையில் நடந்து வந்த மர்ம நபர்கள், மணிகண்டன் கையில் இருந்த மொபைலை பறித்து தப்பினர்.

கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல் திருட முயன்றவர் கைதுகோயம்பேடு: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 36. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடையில், மூட்டை துாக்கும் வேலை செய்கிறார். நேற்று காலை பணி முடிந்து, தான் வேலை செய்யும் கடையில் உள்ள அறையில் துாங்கினார். அப்போது, அறைக்குள் நுழைந்த மர்ம நபர், மொபைலை திருட முயன்றார். அய்யப்பன் அந்த நபரை மடக்கி பிடித்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அரியலுாரைச் சேர்ந்த சதீஷ்குமார், 21, என தெரியவந்தது. இவரிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.செயின் பறித்த மூவருக்கு, 'காப்பு!'விருகம்பாக்கம்: கே.கே.நகரைச் சேர்ந்தவர் வனிதா, 62. இவர், 4ம் தேதி, விருகம்பாக்கம், சின்மயா நகர் அருகே நடந்து சென்றார்.

அப்போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள், 2 சவரன் நகையை பறித்து தப்பினர். விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், மதுரவாயலைச் சேர்ந்த தினேஷ், 27, உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். செயின் பறிமுதல் செய்யப்பட்டது. தினேஷ் மீது, மதுரவாயல், கோயம்பேடு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.வழிப்பறி வாலிபருக்கு வலைஅரும்பாக்கம்: அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் பாஸ்கர், 37; பெயின்டர். நேற்று காலை, வீட்டிற்கு அருகே உள்ள டீக்கடைக்கு நடந்து சென்றார். அவரை வழிமறித்த மர்ம நபர் பணம் கேட்டுள்ளார். பாஸ்கர் பணம் தர மறுத்ததால், கத்தியால் குத்தி பணத்தை பறித்து தப்பினார். பாஸ்கர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.வாகனத்தை சேதப்படுத்திய ஆசாமிஅண்ணாநகர்: அண்ணாநகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ். நேற்று முன்தினம் இரவு, அண்ணாநகர், மூன்றாவது நிழற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற டூ - வீலரை எடுக்குமாறு, அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், கல்லை எடுத்து, போலீஸ் வாகனத்தின் மீது வீசியுள்ளார். அந்த நபரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அண்ணாநகரைச் சேர்ந்த குமார், 42, என்பது தெரியவந்தது.

போலீசார், அவரை கைது செய்தனர்.பத்தாம் வகுப்பு மாணவர் மாயம்ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து செல்வன். இவரது மகன் மகேஷ், 15; 10ம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மகேஷ், திடீரென மாயமானார். அவர் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில், 'தனக்கு படிக்க விருப்பம் இல்லை; ஐந்து ஆண்டுகளுக்கு தன்னை தேட வேண்டாம்' என, எழுதப்பட்டிருந்தது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். தனியார் நிறுவன மேலாளர் கைதுஅம்பத்துார்: அம்பத்துார், தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் பாலு, 54.

இவர், தன் காரை விற்பனை செய்ய, மாங்காட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன மோட்டார் ஏஜன்சி மேலாளர் ரஞ்சித் கண்ணா, 40, என்பவரை அணுகியுள்ளார். ஆனால் அவர், இரண்டு ஆண்டுகளாக கார் விற்ற பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். விசாரித்த அம்பத்துார் போலீசார், ரஞ்சித் கண்ணாவை நேற்று கைது செய்தனர்.காரை கடத்திய 6 பேர் சிக்கினர் செங்குன்றம்: ராயபுரம், பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுனரான ராஜு, 27, என்பவர், 25ம் தேதி, செங்குன்றம் அருகே சவாரி மேற்கொண்டவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டார். மேலும், 4,000 ரூபாய், இரண்டு மொபைல், வெள்ளி செயின், பிரேஸ்லெட் ஆகியவற்றுடன், காரையும் கடத்தினர்.

விசாரித்த செங்குன்றம் போலீசார், சோழவரத்தைச் சேர்ந்த அரவிந்த், 20, இரண்டு சிறுவர்கள் உட்பட, ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.பெண்ணிடம் 2.5 சவரன் பறிப்புதிருநின்றவூர்: திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 45. அதே பகுதியில் உள்ள, பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து வீடு திரும்பிய அவர், கிருஷ்ணாபுரம், ஒவ்றாவது தெருவில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த மர்ம நபர், 2.5 சவரன் நகையை பறித்து தப்பினார். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவருக்கு, 'போக்சோ' செங்குன்றம்: செங்குன்றம், வடகரை பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 65; சென்னை புறநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற ஓட்டுனர். நேற்று முன்தினம், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதை பார்த்த பொதுமக்கள், கணேசனை நையப்புடைத்து, செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார், 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்து, நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

திருவொற்றியூரில் சிறுவன் கடத்தல்? திருவொற்றியூர்: திருவொற்றியூர், வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 42; ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன், கிஷோர், 11; ஏழாம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம் காலை, வடமாநில மர்ம ஆசாமிகள் இருவர், முகத்தில் மயக்க மருந்து தெளித்து தன்னை கடத்தி சென்றதாகவும், மயக்கம் தெளிந்தபோது கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள, முட்புதரில் கிடந்துள்ளதாகவும், தன் தந்தை ஜானகிராமனுக்கு, கிஷோர் தகவல் தெரிவித்தான். ஜானகிராமன் அளித்த புகாரை அடுத்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X