Mahant Nritya Gopal Das, who heads the Ram Janambhoomi Nyas, gets 'Z' category security | ராம ஜென்மபூமி நியாஸ் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராம ஜென்மபூமி நியாஸ் தலைவருக்கு ' இசட் பிரிவு பாதுகாப்பு

Updated : ஜன 11, 2020 | Added : ஜன 11, 2020 | கருத்துகள் (30)
ராம ஜென்மபூமி நியாஸ் தலைவருக்கு ' இசட் பிரிவு பாதுகாப்பு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோயில் கட்டலாம் எனவும், ராமர் கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளையை 3,4 மாதத்தில் மத்திய அரசுஉருவாக்க வேண்டும்; அந்த அறக்கட்டளையிடம் 2.77 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ராம ஜென்மபூமி நியாஸ் அறக்கட்டளை தலைவராக மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே ராஜஜென்ம பூமி நியாஸ் தலைவராக மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் செயல்படுவார். இவரது மேற்பார்வையின் கீழ் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெறும். .





இந்நிலையில் மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் கடந்த 2001-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இவரது உயிருக்கு அன்றிலிருந்தே அச்சுறுத்தல் இருந்து வந்ததால் அப்போது ' ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது ராம ஜென்ம பூமி நியாஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X