சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை, பலி

Added : ஜன 11, 2020
Advertisement

ஆற்றில் மூழ்கி மீனவர் உயிரிழப்புஎண்ணுார்: எண்ணுார், முகத்துவாரம் குப்பத்தைச் சேர்ந்தவர் சுதாகர், 37; மீனவர். நேற்று முன்தினம் இரவு, தன் சகோதரர் சதீஷுடன், முகத்துவாரம் ஆற்று பகுதியில், மீன் பிடிக்க வலை விரித்து விட்டு வந்தனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வலையை எடுக்க படகில் சென்ற சுதாகர், வலிப்பு ஏற்பட்டு, ஆற்றில் தவறி விழுந்தார். நீரில் மூழ்கி தத்தளித்தவரை, அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. நீரில் மூழ்கி அவர் பலியானார்.

தகவலறிந்த எண்ணுார் போலீசார், உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.விபத்தில் தொழிலாளி இறப்புயானைகவுனி: மண்ணடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காசித் பினசாத் சர்மா, 49; கூலித்தொழிலாளி. இவர் நேற்று, ராயபுரம், ராஜாஜி சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர், 29, என்பவர் ஓட்டி வந்த, இருசக்கர வாகனம் மோதியது. இதில் சர்மா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யானைகவுனி போலீசார் சுந்தரை கைது செய்தனர்.கணவன் கண்ணெதிரே மனைவி பலிசெங்குன்றம்: செங்குன்றம், ஆட்டந்தாங்கல் நகரைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி, 50. இவரது மனைவி மகாலட்சுமி, 45. இவர்கள், முன், வியாசர்பாடி சர்மா நகரில் வசித்தனர்.

இதனால், அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசு வாங்க, நேற்று, டூ - வீலரில் மனைவியுடன் விநாயகமூர்த்தி சென்றார். செங்குன்றம்- - திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, டூ - வீலர் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த மகாலட்சுமி, லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மாதவரம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.ஆர்.டி.ஓ., விசாரணைஎம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்.நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 23; கட்டட தொழிலாளி.

இவரது மனைவி தேவி, 20. கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, தேவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, தேவியின் தந்தை, எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கண்ணனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், திருமணமாகி, ஒன்றரை ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X