சிரிய அதிபர் சொத்துக்கள் முடக்கம்

Added : மே 23, 2011
Advertisement

டமாஸ்கஸ் : சிரிய அதிபர் பஷர் அல் அசாத் மீது, ஐரோப்பிய யூனியன் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இதன் மூலம் மக்கள் போராட்டத்தின் மீது அவரது அரசு மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கைகள் குறையும் என்று ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகக் கோரி, கடந்த இரு மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பீரங்கி மற்றும் ராணுவ வீரர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்துதல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகளை அதிபர் அசாத் மேற்கொண்டு வருகிறார்.அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி இதுவரைக்கும் 800க்கும் மேலானோர், இப்போராட்ட காலகட்டத்தில் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போய்விட்டனர்.கடந்த வாரம் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையை வெளியிட்டுப் பேசிய அதிபர் பராக் ஒபாமா, "அசாத் ஜனநாயக ஆட்சியை சிரியாவில் துவக்கி வைக்க வேண்டும். அல்லது பதவியை விட்டு உடனடியாக விலகிவிட வேண்டும்' என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.எனினும் அசாத்தின் ராணுவ ஒடுக்குமுறைகள் தொடரவே, அமெரிக்கா அவர் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.அதற்கு முன்பே, அசாத்தின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மீது மட்டும் ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதோடு ஆயுதப் பரிமாற்றத் தடையும் விதிக்கப்பட்டது.நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கூடிய ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், அசாத் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்க ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி அவரது சொத்துக்கள் முடக்கப்படும்; பயணத்துக்கு தடை விதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X