சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

Added : ஜன 11, 2020
Advertisement

மாதவரம் : புழல், காந்தி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் உமாராணி, 43. இவர், பொருளாதார நெருக்கடி காரணத்தால், தன், இரண்டு மாத பெண் குழந்தையை விற்க, பலரிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.இதை அறிந்த குழந்தைகள் நலக் குழுமத்தினர் இருவர், உமாராணியிடம், 'தங்களுக்கு குழந்தை வேண்டும்' என, கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். இதை நம்பிய உமாராணி, அவர்களிடம், 2 லட்சம் ரூபாய்க்கு, குழந்தையை விற்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல குழுமத்தினர், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

. இதனடிப்படையில் உமாராணி நேற்று கைது செய்யப்பட்டார்.பின், அந்த குழந்தையின் நலன் கருதி, குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X