சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.31 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

Added : ஜன 11, 2020
Advertisement

சென்னை : வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 6:25 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த, இலங்கையைச் சேர்ந்த யோகபிரசாத், 27, என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, அவரது கைப்பையின் உள்ளே, தங்கத்தால் ஆனதும், 16.80 லட்சம் ரூபாய் மதிப்பிலானதுமான, பழங்கால நாணயங்கள், 422 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களில் ஒன்றான துபாயில் இருந்து, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானம் சென்னை வந்தது.அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிஜாமுதீன், 36, என்பவரை சோதனையிட்ட போது, அவரது ஆசனவாயிலிருந்து, 14. 60 லட்சம் மதிப்பிலான, 368 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்டவர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X